Avuri leaf powder

(100gms)

122.64
Qty :

Description

Avuri leaf powder

Avuri leaf powder முழுத்தாவரமும் கசப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் காரப் பண்பும் கொண்டது. இலைகள், வீக்கம், கட்டி முதலியவற்றைக் கரைக்கும், விஷத்தை முறிக்கும், உடலைத் தேற்றும், மலமிளக்கும், வயிற்றுப் புழுக்களைக் கொல்லும், உடலைப் பலமாக்கும்.

தலை முடியைக் கருப்பாக்கும், மாலைக்கண் நோயைக் குணமாக்கும். வேர் விஷத்தை முறிக்கும். கூந்தல் தைலங்களில் வேர் மற்றும் இலைகள் முக்கியப் பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.

அவுரி சிறுசெடி வகையைச் சார்ந்தது, பயிரிடப்படுபவை, புதர்ச்செடிகள் போல அடர்த்தியாக வளர்ந்திருக்கும். இலைகள் ஆழ்ந்த பச்சை நிறமானவை. இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் பெருமளவு இயற்கையாக விளைகின்றது.

முடி கொட்டும் பிரச்னை உள்ளவர்கள் பயன்படுத்தும் தைலங்களில், கரிசாலை, நெல்லிக்காய், இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உள்ள மூலிகை. கப, வாத நோய்களைத் தீர்க்கும். வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும்.

நோய்களில் உதரம் என்னும் வயிறு வீக்கம், மண்ணீரல்  நோய்களை நீக்கும். உடல்எடை குறைதல் பிரச்னை தீர, அவுரி வேரை பசும் பாலில் கலந்து பருக வேண்டும்.

However, நீலநிறச் சாயம் இதன் வேர் மற்றும் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. அவுரியின் இலை மற்றும் வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாதுப் பொருட்களை மருத்துவ ரீதியாக சுத்தம் செய்வதற்கு இது மிகச் சிறந்த தாவரமாக உபயோகிக்கப்படுகின்றது.

காணாக்கடி, ஒவ்வாமை, தோல் நோய்கள் குணமாக பசுமையான அவுரி இலை ஒரு கைப்பிடியளவு சேகரித்துக் கொள்ள வேண்டும், அத்துடன், சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, 1 டம்ளராக காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர வேண்டும்.

இவ்வாறு தினமும் இரண்டு வேளைகள் 7 நாட்கள் வரை செய்து வர வேண்டும்.

முடி வளர்க்கும் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய் இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது.

கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உல்ல மூலிகை அவுரியின் இலை மற்றும் காய்கள் மலச்சிக்களால் நோயைக் குணப்படுத்த பெரிதும் பயன்படுகிறது.

Similarly, மஞ்சள் காமாலை தீர அவுரி இலைகளை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு, ஒரு டம்ளர் காய்ச்சிய வெள்ளாட்டுப்பாலில் கலக்கி, வடிகட்டி அதிகாலையில் குடித்துவர வேண்டும். மூன்று நாட்கள் இவ்வாறு செய்ய வேண்டும்.

Avuri leaf powder பாம்புக்கடிக்கு முதலுதவி சிகிச்சை பொருள்

அவுரிஇலையைப் பசுமையாக அரைத்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிடக் கொடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பினால் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.

வெள்ளைப்படுதல் குணமாக அவுரி வேர், யானை நெருஞ்சில் இலைகள் சம எடையாக எடுத்துக் கொண்டு, அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, மோரில் கலந்து காலையில் 10 நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.

அவுரிகற்பம்

அவுரி, மஞ்சள் கரிசாலை, வெள்ளைக் கரிசாலை, குப்பைமேனி, கொட்டைக்கரந்தை, செருப்படை ஆகியவற்றின் இலைகளை சம அளவாகச் சேகரித்து, நிழலில் காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

In other words , ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர பெண்களுக்கான முறையற்ற மாதவிடாய் சரியாகும். மேலும், வயிற்றுப்பூச்சிகள், கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகளும் விலகும்.

For instance, காலை, மாலை வேளைகளில் 45 நாட்கள் வரை தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.

 

16 reviews for Avuri leaf powder

 • Bindhu

  Iam watching this channel

 • Sujatha

  Excellent ver nice

 • Rathika

  I like it

 • Mahendran

  Use for hair

 • kamal

  best

 • BINDU R.U

  its very good product for grey hair

 • Rohit

  Nice

 • chithra Mohankumar

  good

 • Danish

  Nice power

 • sharda Subramaniam (verified owner)

  very good product please use as informed

 • Surya.mp

  Good devitional msgs

 • Rajathi

  Good

 • araginimohan (verified owner)

  Nice in first time I am using

 • Sathiyabhama

  very good.

 • Jothi

  Very useful for life long

 • pradeepa Lakshmikanthan

  good

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Related products